உலகிலுள்ள பேறுகால மருத்துவப் பணியாளர்களின் நிலை 2022: கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா
January 3 , 2023 690 days 388 0
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இதன்படி, பேறுகால மருத்துவப் பணியாளர்கள் வழங்கும் சேவைகளுக்கான பொது வழங்கீட்டுத் திட்டம் இருந்தால், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் 2035 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.2 மில்லியன் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
பாலியல், இனப்பெருக்கம், தாய், பச்சிளம் குழந்தை மற்றும் இளம் பருவத்தினர் ஆகியோரின் ஆரோக்கியத்தை (SRMNAH) மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் உத்திகளை வெற்றிகரமாக அடைவதற்கு ஒரு வலுவான எண்ணிக்கையில் பேறுகால மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.