TNPSC Thervupettagam

உலகிலேயே 'அதிகக் குற்றங்கள் நிறைந்த நாடுகள்' தரவரிசை

April 17 , 2023 459 days 248 0
  • உலகப் புள்ளிவிவரங்கள் என்ற அமைப்பானது, உலகிலேயே 'அதிகக் குற்றங்கள் நிறைந்த நாடுகள்' என்ற  தரவரிசையைப் பகிர்ந்துள்ளன.
  • இந்தப் பட்டியலில், வெனிசுலா முதலிடத்திலும், பப்புவா நியூ கினியா (2), ஆப்கானிஸ்தான் (3), தென்னாப்பிரிக்கா (4), ஹோண்டுராஸ் (5) ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.
  • குற்றவியல் தரவரிசையில் இந்தியாவை விட அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை முன்னணியில் உள்ள நிலையில் இந்தியா இதில் 77வது இடத்தினைப் பெற்று உள்ளது.
  • உலகப் புள்ளிவிவரங்கள் அமைப்பின் தகவலின் படி, அமெரிக்கா 55வது இடத்திலும், ஐக்கியப் பேரரசு 65வது இடத்திலும் உள்ளன.
  • 92வது, 100வது மற்றும் 135வது ஆகிய இடங்களில் உள்ள துருக்கி, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே குறைவான குற்றங்கள் பதிவான சில நாடுகளாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்