TNPSC Thervupettagam

உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2024

July 31 , 2024 115 days 167 0
  • 2023 ஆம் ஆண்டில் உலகளவில் 733 மில்லியன் மக்கள் அல்லது 11 பேரில் ஒருவர் பட்டினி நிலையினை எதிர்கொண்டுள்ளனர்.
  • பட்டினி நிலையில்லாத உலக நாடுகள் என்ற இரண்டாவது நிலையான மேம்பாட்டு இலக்கினை (SDG) அடைவதற்கு உலக நாடுகள் வெகு தொலைவில் உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டில் 713 முதல் 757 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டை விட சுமார் 152 மில்லியன் அதிகமாகும்.
  • 2023 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 28.9 சதவீதம் பேர் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையில் இருந்தனர்.
  • பட்டினி நிலையினை எதிர்கொள்ளும் மக்கள்தொகை சதவீதமானது ஆப்பிரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது (20.4 சதவீதம்) என்ற நிலையில் இது ஆசியாவில் (8.1 சதவீதம்) நிலையானதாக உள்ளது என்பதோடு லத்தீன் அமெரிக்காவில் (6.2 சதவீதம்) முன்னேற்றத்தினையும் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 2.33 பில்லியன் மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர்.
  • கடந்த பத்தாண்டுகளில் 12.1 சதவீதமாக (2012) இருந்த இளம் வயதினரில் காணப்படும் அதிக உடல் பருமன் மதிப்பீடுகள் ஆனது 15.8 சதவீதமாக (2022) அதிகரித்திருப்பது ஒரு நிலையான உயர்வைக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்