TNPSC Thervupettagam

உலகில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் இந்தியா

June 30 , 2018 2344 days 679 0
  • தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேசன் நடத்திய கணக்கெடுப்பின் படி, அதிக ஆபத்தான பாலியல் வன்முறை மற்றும் கட்டாய அடிமை உழைப்பு ஆகிய காரணங்களுக்காக உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • 2011-ல் நடத்தப்பட்ட இதே கருத்துக்கணிப்பின் படி இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது. இந்த முறை பெண்களுக்கான பாதுகாப்பில் இந்தியாவை விட பாகிஸ்தான் சிறந்ததாகக் கருதப்பட்டு 6-வது இடத்தில் உள்ளது.
  • போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. சோமாலியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
  • மேற்கத்திய நாடுகளில் ஒன்றான அமெரிக்கா மட்டும் முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா ஒட்டுமொத்தமான தர வரிசையில் 10வது இடத்திலும் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தலில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான பதிவுகள் 2007 முதல் 2016 வரை 83% என்று அரசாங்கத் தரவு கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்