TNPSC Thervupettagam

உலகில் முதல் முறையாக ஆளில்லா விமானங்கள் மூலம் கால்நடை தடுப்பூசிகள் விநியோகச் சேவை

November 22 , 2022 607 days 313 0
  • இந்திய நோய் தடுப்பியல் நிறுவனத்தின் (IIL) விலங்குகளுக்கான தடுப்பூசியானது ஆளில்லா விமானங்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட உலகின் முதல் தடுப்பூசியாக மாறியுள்ளது.
  • ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய நோய்த் தடுப்பியல் நிறுவனமானது, ஆசியாவிலேயே அதிகளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
  • டெக் ஈகிள் என்ற ஆளில்லா விமான விநியோக சேவை வழங்கீட்டு புத்தொழில் நிறுவனமானது, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் கால்நடை பராமரிப்புப் பணிகளுக்காக இந்தத் தடுப்பூசி விநியோகத்தை மேற்கொண்டது.
  • முதலாவது ஆளில்லா விமான சேவையானது ரோயிங்கில் இருந்து பக்லாம் வரை மேற் கொள்ளப் பட்டது.
  • ‘வான்வழியாக மருந்து வழங்கீடு' என்ற திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, அருணாச்சலப் பிரதேச மாநிலமானது ஆளில்லா விமானம் மூலம் கால்நடைகளுக்குத் தடுப்பூசிகள் வழங்கும் சேவையைத் தொடங்கியுள்ளது.
  • ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசிகள் வழங்கப்படுவதன் மூலம், தடுப்பூசிகள் தொலைதூர கடினமான நிலப்பரப்புகளை விரைவாக அடைவது மட்டுமல்லாமல், பல நோய்களிலிருந்து கால்நடைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சில முக்கியமான தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்குவதற்கும் உதவும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்