TNPSC Thervupettagam

உளவுச் சாதனமாக செயல்படும் மருத்துவச் சாதனங்கள்

April 17 , 2023 461 days 218 0
  • மருத்துவத் தொழில்நுட்பச் சாதனங்கள் உளவு மென்பொருள் மற்றும் தீம்பொருளாக மாற்றப் படச் செய்யலாம் என்பதோடு இது பல்வேறு தரவுகளைக் கூட கைப்பற்றக் கூடியதாகவும் மாற்றப் படலாம்.
  • மருத்துவச் சாதனங்களில் மென்பொருளாக செயல்படும் மருத்துவச் சாதனம் (SaMD) மற்றும் மென்பொருளினைக் கொண்ட மருத்துவச் சாதனங்கள்  (SiMD) ஆகிய பல்வேறு வகைகள் உள்ள நிலையில், அவை பொதுவாக இணையம், கைபேசிகள், சேவையகங்கள் மற்றும் மேகக் கணிமை ஆகியவற்றுடன் இணைக்கப் பட்டுள்ளது.
  • இதில் ஆக்சிஜன் அளவிகள், செவிப்புலன் கருவிகள், குளுக்கோஸ் அளவிகள், மருத்துவ கண்காணிப்பு அம்சம் கொண்ட கடிகாரங்கள் மற்றும் இதயவேக முடுக்கிகள் மற்றும் உட்செலுத்தக் கூடிய இதய வேகம் மற்றும் துடிப்புப் பதிவுக் கருவிகள் போன்ற உடலினுள் செலுத்தக் கூடிய உபகரணங்கள் ஆகியவையும் அடங்கும்.
  • உலகின் 20 முன்னணி மருத்துவச் சாதன சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்பதோடு ஆசியாவிலேயே நான்காவது பெரியச் சந்தையாகவும் இந்தியா உள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 44,708 கோடி (5.59 பில்லியன் டாலர்) ரூபாயாக இருந்த மருத்துவச் சாதன இறக்குமதியானது 2021-22 ஆம் ஆண்டில் 41% அளவிற்கு அதிகரித்து 63,200 கோடி ரூபாயாக (7.91 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் மருத்துவச் சாதனங்கள் துறையின் பங்கு எனபது 2025 ஆம் ஆண்டில் 50 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்