TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட HPV பரிசோதனைக் கருவிகள்

April 29 , 2025 13 hrs 0 min 22 0
  • இந்திய நாடானது, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக்காக வேண்டி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட HPV சோதனை கருவிகளை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இந்த முக்கியமான அறிமுகமானது, "இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) சோதனைகளைச் சரிபார்த்தல்" என்ற தேசியத் திட்டத்தின் ஒரு உச்ச நிலையைக் குறிக்கிறது.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆனது, இந்தியப் பெண்களிடையே மிக அதிகளவில் நிலவும் இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக உள்ளது என்பதோடு மேலும் இந்தியா உலகளாவிய புற்றுநோய்ப் பாதிப்புகளில் அதிகப் பங்கினைக் கொண்டதாக உள்ளது.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் ஏற்படும் உலகளாவிய உயிரிழப்புகளில் சுமார் 25% இந்தியாவில் பதிவாகிறது.
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பரிசோதனைக் கருவிகள் தேசிய சுகாதாரத் திட்டங்கள் மூலம் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்