TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உயர் ஆற்றல் கொண்ட பல்எரிபொருள் இயந்திரங்கள்

July 31 , 2018 2308 days 705 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு வகையான உயர் ஆற்றல் கொண்ட பல் எரிபொருள் இயந்திரங்கள் V-46-6 மற்றும் V92S2 ஆகியவை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதன் முறையாக இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
  • படைக்கருவிகள் தொழிற்சாலை கழகத்தின் (Ordnance Factory Board - OFB) ஒரு பிரிவான ஆவடி இயந்திரங்கள் தொழிற்சாலையினால் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன.
  • இந்த இயந்திரங்கள் ரஷ்ய வடிவமைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும். V92S2 என்பது ஒரு 1000 குதிரை ஆற்றல் செயல்திறன் கொண்ட அதிக ஆற்றலுடைய டீசல் இயந்திரமாகும். மேலும் இது T-90 போர் பீரங்கியுடன் (பீஸ்மா பீரங்கி) பொருத்தப்பட்டுள்ளது.
  • V46-6 என்பது 780 HP கொண்ட அதிக ஆற்றலுடைய டீசல் என்ஜினாகும். இது முக்கியப் போர் பீரங்கியான T-72 ல் பொருத்தப்பட்டுள்ளது (அஜயா பீரங்கி).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்