TNPSC Thervupettagam

உள்நாட்டில் உள்ள முறைப்படியான முக்கியமான வங்கிகள்

March 18 , 2019 2081 days 629 0
  • எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் ரிசர்வ் வங்கியின் 2018 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டில் உள்ள முறைப்படியான முக்கியமான வங்கிகள் (Domestic Systemically Important Banks / D-SIB) பட்டியலில் தொடர்கின்றன.
  • மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இந்த D-SIB க்கள் அதிக மூலதனத்தை பராமரிக்க வேண்டும்.
  • இந்த D-SIB குறியீடானது வங்கியானது திவாலாகக் கூடிய அளவைவிட பெரியது என குறிப்பிடுகிறது.
  • சில வங்கிகள் அவற்றின் அளவு, குறுக்கு விசாரணை நடவடிக்கைகள், சிக்கலான தன்மை, மாற்று மற்றும் இடைத்தொடர்பு இல்லாமை ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியமான வங்கிகளாக வரையறுக்கப்படுகிறது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 % க்கும் அதிகமாக சொத்துகளைக் கொண்டுள்ள வங்கிகள் இந்தக் குழுவின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
  • இந்தப் பட்டியலில் வங்கிகள் சேர்க்கப்படுவது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஆறுதலை அளிக்கிறது. ஏனெனில் இந்த வங்கிகள் தோல்வியடைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
  • இதனால் சந்தையில் இருந்து வாங்கப்படும் இந்த வங்கிகளின் கடன்களுக்கான செலவுகள் அதன் மற்ற சக வங்கிகளை விட மலிவானவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்