TNPSC Thervupettagam

உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் 2023

January 4 , 2024 196 days 201 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த (D-SIBs) வங்கிகளின் சமீபத்திய பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது பாரத் ஸ்டேட் வங்கி, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவற்றை உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாகத் தக்க வைத்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவற்றினை D-SIB வங்கிகளாக அறிவித்தது.
  • D-SIB என்ற கட்டமைப்பின்படி, 2015 ஆம் ஆண்டு முதல் D-SIB வங்கிகளாக நியமிக்கப் பட்ட வங்கிகளின் பெயர்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்த வங்கிகளை அவற்றின் அமைப்பு ரீதியான முக்கியத்துவ மதிப்பெண்களை (SISs) பொறுத்து அதற்குப் பொருத்தமான பிரிவுகளில் வகையிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்