TNPSC Thervupettagam

உள்நாட்டு முறைசார்பு முக்கிய வங்கிகள்

January 7 , 2022 926 days 451 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது பாரத் ஸ்டேட் வங்கி, ICICI வங்கி மற்றும் HDFC வங்கி ஆகியவற்றை உள்நாட்டு முறைசார்பு முக்கிய வங்கிகளாக தக்க வைத்துள்ளது.
  • இந்த 3 வங்கிகளும், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 04 முதல் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்பட்டு வரும் உள்நாட்டு முறைசார்பு முக்கிய வங்கிகள் என்ற பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
  • உள்நாட்டு முறைசார்பு முக்கிய வங்கிகள் என்பவை, ஒருவேளை தோல்வியடைந்தால் (வீழ்ச்சியடைந்தால்) அந்நாட்டுப் பொருளாதாரத்தின் மீது ஒரு குறிப்பிடத் தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான வங்கிகள் ஆகும்.
  • இவை 5 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • அவை வகை 1, வகை 2, வகை 3, வகை 4 மற்றும் வகை 5 என்பவையாகும்.
  • வகை 5 ஆனது மிக முக்கியமான வங்கியாக இருப்பதோடு பிற வங்கிகள் அதனைத் தொடர்ந்து இறங்கு வரிசையில் உள்ள வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
  • இதில் பாரத் ஸ்டேட் வங்கி வகை மூன்றில் உள்ளது.
  • ICICI வங்கி மற்றும் HDFC வங்கி ஆகியவை வகை ஒன்றில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்