TNPSC Thervupettagam

உள்நாட்டுக் கால்நடை இனங்கள்

January 10 , 2023 686 days 638 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையானது (ICAR) கடந்த ஓராண்டில், 10 புதிய வகை கால்நடை இனங்களைப் பதிவு செய்துள்ளது.
  • இதில் மாடு, எருமை, ஆடு மற்றும் பன்றி ஆகியவை அடங்கும்.
  • இந்தப் பதிவானது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் தேதியன்றைய நிலவரப் படி உள்நாட்டு இனங்களின் மொத்த எண்ணிக்கையை 212 ஆக உயர்த்தியுள்ளது.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபை - தேசிய விலங்கின மரபணு வளங்கள் கழகம் (NBAGR) மூலம் இந்தப் பதிவுகள் மேற்கொள்ளப் பட்டன.
  • இந்த 10 புதிய இனங்களில் பின்வருபவை அடங்கும்
    • மூன்று புதிய கால்நடை இனங்கள் - கதானி, சஞ்சோரி, மாசிலம்.
    • ஒரு எருமை இனம் - பூர்ணதடி,
    • மூன்று ஆடு இனங்கள் - சோஜாட், கரௌலி, குஜாரி மற்றும்
    • மூன்று பன்றி இனங்கள் - பண்டா, மணிப்பூரி பிளாக், வாக் சாம்பில்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்