அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) மற்றும் இந்தியன் எண்ணெய் உற்பத்திக் கழகம் (IOCL) ஆகியவை புதிதாகச் செயல்படுத்தப்பட்ட உள்நாட்டு பணமதிப்புப் பயன்பாட்டு (LCS) அமைப்பின் கீழ் முதல் கச்சா எண்ணெய் கொள்முதல் பரிவர்த்தனையை நிறைவு செய்துள்ளன.
இது பரிவர்த்தனைக்கானச் செலவினங்கள் மற்றும் நேரத்தைக் கணிசமான அளவில் குறைக்கும் அதே நேரத்தில் நாடுகளுக்கிடையேயான பரிவர்த்தனைகளுக்கு அந்தந்த தேசங்களின் பண மதிப்பினைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.
LCS நெறிமுறையானது, பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணம் வழங்கீட்டிற்கான பண மதிப்பினைத் தேர்ந்தெடுப்பதற்கான நெகிழ்திறனை வர்த்தகர்களுக்கு வழங்கச் செய்கிறது.