2013-14 ஆம் ஆண்டில் சுமார் 2,53,346 கோடி ரூபாயாக இருந்த நாட்டின் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடானது, 2024-25 ஆம் ஆண்டில் 6,21,940.85 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியானது ஒரு சாதனை அளவிலான உச்சமாக 1.27 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இது 2014-15 ஆம் நிதியாண்டில் பதிவான 46,429 கோடி ரூபாயினை விட தோராயமாக 174% அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தியில் சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடைவதற்கான பாதையில் இந்தியா உள்ளது.
இந்தியா 2029 ஆம் ஆண்டிற்குள் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உற்பத்தியை எட்டுவதற்கும், மேலும் உலகளாவியப் பாதுகாப்பு உற்பத்தி மையமாக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
2014-15 ஆம் நிதியாண்டில் 1941 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியானது, 2023-24 ஆம் நிதியாண்டில் 21,083 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
முந்தைய நிதியாண்டான 2022-23 ஆம் ஆண்டில் இருந்த 15,920 கோடி ரூபாயாக இருந்த பாதுகாப்பு ஏற்றுமதியில் 32.5% வளர்ச்சி பதிவாகியுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்திப் பொருட்கள் அதிகளவில் என்று ஏற்றுமதி செய்யப் படும் முதல் மூன்று இடங்கள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அர்மேனியா ஆகியவையாகும்.