பங்குச் சந்தைக் கண்காணிப்பு ஆணையமான இந்தியப் பங்குகள் மற்றும் பரிமாற்ற வாரியம் ஆனது, மிக அதிகளவு விற்பனை ஆகும் நுகர்வோர் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான (FMCG) நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு, அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உள் பேர வர்த்தக விதிமுறைகளை மீறியதாகக் கூறி ஒரு எச்சரிக்கை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உள் பேர வர்த்தகம் என்பது சந்தையில் நிலவும் மிகக் கடுமையான முறைகேடுகளில் ஒன்றாகும்.
SEBI (உள் பேர வர்த்தகத்தைத் தடை செய்தல்) விதிமுறைகள், 2015 (PIT விதிமுறைகள்) ஆனது இந்தியாவில் உள் பேர வர்த்தகத்தினைத் தடை செய்கிறது.
பங்கு விலைகளின் இரகசியக் காப்பு தகவல் அடிப்படையில் அந்த நிறுவனத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள் அதன் பங்குகள் மற்றும் பத்திரங்களில் வர்த்தகம் செய்வதைத் தடுப்பதே அதன் நோக்கமாகும்.
1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 11(2) E பிரிவானது, உள் பேர வர்த்தகத்தைத் தடை செய்கிறது.