உள்ளடக்கக் குறியீட்டில் இடம் பெற்ற 129 நாடுகளின் பட்டியலில் இந்தியா 117வது இடத்தில் உள்ளது.
இது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள வேற்றுமை மற்றும் உரிமை கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது.
வங்காளதேசம் (106) மற்றும் இஸ்ரேல் (115) போன்ற சிறிய நாடுகள் இந்தியாவை விட சிறந்த இடத்தில் உள்ளன.
இந்தக் குறியீடு ஆனது, இனம், மதம், பாலினம், பாலின நோக்குநிலை, மாற்றுத் திறன் மற்றும் பொது மக்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான உள்ளடக்கத்தினை பல அளவுருக்களைப் பயன்படுத்தி ஆராய்கிறது.
இந்தியா மத உள்ளடக்கத்தில் கடைசி இடத்திலும் (129), பாலினத்தில் 121வது இடத்திலும், மாற்றுத் திறனாளிகளின் பிரிவில் 108வது இடத்திலும், இனத்தில் 87வது இடத்திலும், பொது மக்கள் தொகையில் 40வது இடத்திலும், LGBTQ பிரிவில் 39வது இடத்திலும் உள்ளது.
நியூசிலாந்து நாடானது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தக் குறியீட்டில் முதலிடம் பெற்றுள்ளது.
போர்ச்சுகல் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது (2022 ஆம் ஆண்டில் 5வது இடம்) என்ற நிலையில் அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த உலகளாவியப் பட்டியலில் ஈரான் கடைசி இடத்தில் உள்ளது.