TNPSC Thervupettagam

உள்ளடங்கிய வளர்ச்சிக் குறியீடு - 2018

January 25 , 2018 2349 days 815 0
  • உலக பொருளாதார மன்றத்தால் (World Economic Forum) வெளியிடப்படும் உள்ளடங்கிய வளர்ச்சிக் குறியீட்டின் (Inclusive Devcelopment Index) 2018 ஆம் ஆண்டின் பதிப்பிற்கான வெளியீட்டில், வளரும் பொருளாதாரமுடைய 74 நாடுகளுள் இந்தியா 62வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • அண்டை நாடுகளை காட்டிலும் இந்தியா பின்தங்கிய இடத்திலுள்ளது.
    • சீனா (26வது இடம்)
    • பாகிஸ்தான் (47வது இடம்)
    • வங்க தேசம் (34வது இடம்)
  • இக்குறியீட்டின் 2017ஆம் ஆண்டிற்கான பதிப்பில், வளரும் பொருளாதாரமுடைய 79 நாடுகளுள் இந்தியா 60 வது இடத்தை பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
  • 2018ஆம் ஆண்டிற்கான இக்குறியீட்டின்படி, நார்வே மீண்டும் உலகின் மிக உயர்ந்த உள்ளடக்குத் தன்மை கொண்ட மேம்பட்ட பொருளாதாரமுடைய நாடாக தொடர்கின்றது.
  • இதே போல் லிதுவேனியா மீண்டும் உள்ளடக்குத் தன்மை கொண்ட வளரும் நாடுகள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
  • குறைந்த அளவில் குறியீட்டின் கணக்கீட்டு அளவுருக்களின் மதிப்பை பெற்றிருந்தாலும் “முன்னேறும் போக்கு“ (Advancing trend) கொண்ட  10 வளரும் பொருளாதார நாடுகளுள் ஒன்றாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
  • உலக அளவில்  இரு வளர்ந்த பொருளாதார நாடுகள் மட்டுமே (Advanced Economics)   முன்னேறும் போக்கை கொண்டுள்ளன.
  • G-7 நாடுகளுள் ஜெர்மனி முதல் இடத்தில் உள்ளது.
  • இந்தியா உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் பொருளாதார நாடுகளுள் இரஷ்யா முதலிடத்தில் உள்ளது. பிரிக்ஸின் 5 நாடுகளுள் இந்தியா நான்காவது இடத்திலுள்ளது. கடைசி இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.

உள்ளடங்கிய வளர்ச்சி குறியீடு

  • உள்ளடங்கிய வளர்ச்சிக் குறியீடானது ஆண்டுதோறும் உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்படுகின்றது.
  • GDP க்கு மாற்றாக, உலக நாடுகளின் பொருளாதார செயல்பாட்டை (National Economic Performance) கணக்கிடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட புது கணக்கீட்டு அளவையே உள்ளடங்கிய வளர்ச்சிக் குறியீடு ஆகும்.
  • மக்களின் வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை (Environmental Sustainability), சம்பந்தப்பட்ட நாட்டின் அரசு எவ்வாறு தனது எதிர்கால தலைமுறையினை அதிகரிக்கும் கடன்பாட்டிலிருந்து காக்கிறது (Protection of Future Generation from Further indebtedness) போன்ற அளவுருக்களின் அடிப்படையில் இந்த குறியீடு கணக்கிடப்படுகின்றது.
  • வளர்ச்சி மற்றும் மேம்பாடு, உள்ளடக்குத்தன்மை மற்றும் தலைமுறைகளுக்கிடையேயான சமநிலை (Inter Generational equity) போன்ற மூன்று தூண்களின் அடிப்படையில் 103 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இக்குறியீட்டின் மூலம் கணக்கிடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்