தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் என மாற்றுத் திறனாளிகளை நியமிப்பது குறித்த இரண்டு மசோதாக்களை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார்.
நகராட்சி நிர்வாகத் துறை சார்பாக ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தினைத் திருத்தி அமைப்பதன் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பேரூராட்சிகள், நகராட்சி மன்றங்கள் மற்றும் மாநகராட்சிக் கழகங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான இந்த மாநில அரசின் முடிவை நடைமுறைப்படுத்த இந்த மசோதா முயல்கிறது.
கிராமப்புற மேம்பாட்டுத் துறை சார்பாக மற்றொரு மசோதா அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது.
1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தினைத் திருத்தியமைப்பதன் மூலம், அனைத்து கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து ஒன்றியச் சபைகள் மற்றும் மாவட்டப் பஞ்சாயத்துகளிலும் ஒரு மாற்றுத் திறனாளியை நியமிக்க வகை செய்யும் மாநில அரசாங்கத்தின் முடிவைச் செயல்படுத்த இது முயன்றது.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 35 மாற்றுத் திறனாளிகள் மட்டுமே உள்ளனர்.
இந்த மசோதாக்கள் இயற்றப்பட்டவுடன், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 650 மாற்றுத் திறனாளிகள், கிராமப் பஞ்சாயத்துகளில் 12,913 மாற்றுத் திறனாளிகள், பஞ்சாயத்து ஒன்றியங்களில் 388 மாற்றுத்திறனாளிகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் 37 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவார்கள்.
மாநகராட்சிக் கழகத்தில் ஒரு மாற்றுத் திறனாளி நபர் இம்மாநில அரசாங்கத்தினால் அதன் உறுப்பினராக நியமிக்கப்படுவார்.
100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நகராட்சி மன்றத்தில் /சபையில், இரண்டு மாற்றுத் திறனாளிகள் (PwDs) இயக்குநரால் பரிந்துரைக்கப்படுவார்கள்.
அவ்வாறு பரிந்துரைக்கப் பட்டவர்களின் பதவிக்காலம் அந்தந்தச் சபையின் பதவிக் காலத்துடன் ஒத்திருக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற மதிப்பு, கட்டணம் அல்லது கொடுப்பனவுகளைப் பெற அவர்களுக்கு உரிமை உண்டு.
இருப்பினும், தேர்ந்தெடுக்கப் பட்ட அச்சபை கலைக்கப்பட்டால் அத்துடன் அவர்களின் பிரதிநிதித்துவமும் முடிவடையும்.
குறிப்பிடத் தக்க வகையில், எந்தவொரு சபை நடவடிக்கைகளிலும் பரிந்துரைக்கப் பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்காது.
இந்த மசோதாக்கள் என்பவை 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் கொள்கைகளுடன் ஒத்துப் போகின்றன.