TNPSC Thervupettagam

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் – தமிழ்நாடு

December 29 , 2019 1666 days 945 0
  • தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
  • இந்த தேர்தலானது எம். பழனிசாமி என்பவரின் தலைமையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது.
  • கடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலானது 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.
  • தற்போது, மொத்தமுள்ள 37 மாவட்டங்களில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மட்டுமே நடத்தப் பட்டது.
  • காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப் படவில்லை.
  • மாநிலத்தில் உள்ள கிராமப்புற வாக்காளர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து நான்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
  • இது கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், ஒன்றியப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் ஒரு நேரடித் தேர்தலாகும்.
  • கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் மற்றும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல் எந்தவொரு கட்சியையும் சாராத வகையில் நடைபெறும்.
  • மாவட்டப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், ஒன்றியப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகியோருக்கான தேர்தல் கட்சியின் அடிப்படையில் நடைபெறும்.
  • மாவட்டப் பஞ்சாயத்து மற்றும் ஒன்றியப் பஞ்சாயத்து ஆகியவற்றிற்கான  தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலானது ஜனவரி 11 ஆம் தேதியன்று நடைபெற இருக்கின்றது.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் பற்றி

  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளானது 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள் மற்றும் 561 நகர்ப்புறப் பஞ்சாயத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளானது 12,524 கிராமப் பஞ்சாயத்துகள், 388 ஒன்றியப் பஞ்சாயத்துகள் மற்றும் 33 இந்திய மாவட்ட கவுன்சில்கள்/மாவட்டப் பஞ்சாயத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்