மாநில அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மேயர்கள் மற்றும் நகராட்சிகளின் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்களை நடத்துவதற்கான ஒரு அவசரச் சட்டமானது தமிழ்நாட்டின் ஆளுநரான பன்வாரிலால் புரோஹித்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்புடைமை, கூட்டுப் பொறுப்பு ஆகியவை உயரிய குடிமைப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் முறையிலிருந்து மறைமுகத் தேர்தல் முறைக்கு மாற்றுவதற்கானக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இந்த அவசரச் சட்டம் பின்வரும் சட்டங்களைத் திருத்தியுள்ளது:
சென்னை நகர மாநகராட்சிச் சட்டம், 1919,
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920,
மதுரை நகர மாநகராட்சிச் சட்டம், 1971,
கோயம்புத்தூர் நகர மாநகராட்சிச் சட்டம், 1981.
இது 15 மாநகராட்சி அமைப்புகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 நகரப் பஞ்சாயத்துகள் அல்லது பேரூராட்சிகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.