TNPSC Thervupettagam

உள்ளாட்சி அமைப்புத் தேர்தலுக்காக அவசரச் சட்டம்

November 22 , 2019 1886 days 877 0
  • மாநில அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மேயர்கள் மற்றும் நகராட்சிகளின் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்களை நடத்துவதற்கான ஒரு அவசரச் சட்டமானது தமிழ்நாட்டின் ஆளுநரான பன்வாரிலால் புரோஹித்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பொறுப்புடைமை, கூட்டுப் பொறுப்பு ஆகியவை உயரிய குடிமைப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் முறையிலிருந்து மறைமுகத் தேர்தல் முறைக்கு மாற்றுவதற்கானக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
  • இந்த அவசரச் சட்டம் பின்வரும் சட்டங்களைத் திருத்தியுள்ளது:
    • சென்னை நகர மாநகராட்சிச் சட்டம், 1919,
    • தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920,
    • மதுரை நகர மாநகராட்சிச் சட்டம், 1971,
    • கோயம்புத்தூர் நகர மாநகராட்சிச் சட்டம், 1981.
  • இது 15 மாநகராட்சி அமைப்புகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 நகரப்  பஞ்சாயத்துகள் அல்லது பேரூராட்சிகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்