TNPSC Thervupettagam

உள்ளூர் மக்களுக்கு 100 சதவிகித ஒதுக்கீடு

August 5 , 2022 716 days 412 0
  • பொது வேலைவாய்ப்புகளில், 13 பட்டியலிடப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு 100% இடஒதுக்கீடு வழங்குவதாக ஜார்க்கண்ட் அரசு 2016 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிவிப்பினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
  • அரசின் முடிவானது பாரபட்சமானது மற்றும் அனுமதிக்க முடியாதது என்று கூறிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை இந்தத் தீர்ப்பானது உறுதி செய்தது.
  • இந்த அறிவிப்பானது அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் இந்திய அரசியல் அமைப்பின் 14, 16(2), 16(3) மற்றும் 35 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானதாகும்.
  • 1992 ஆம் ஆண்டு இந்திரா சாஹ்னே வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள படி இட ஒதுக்கீட்டிற்கான அதிகபட்ச வரம்பு 50% ஆகும்.
  • 2016 ஆம் ஆண்டில், ஜார்க்கண்ட் அரசானது, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT) பதவிகளுக்கு மாநிலத்தில் உள்ள 13 பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 100% இடஒதுக்கீட்டுடன் நியமனம் செய்வதற்காக வேண்டி அதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவிப்பினை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்