TNPSC Thervupettagam

உழவன் – இருமொழி கைபேசி செயலி

April 13 , 2018 2418 days 2374 0
  • உழவர்களின் நன்மைக்காக தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் ஓர் முயற்சியாக தமிழக அரசானது உழவன் (Uzhavan) எனும் இரு மொழியிலான (bi-lingual) கைபேசி செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.

  • தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இச்செயலி வெளியிடப்பட்டுள்ளது. தங்களுடைய பயிர் காப்பீடு (crop insurance) பற்றிய தகவல்கள் உட்பட ஒன்பது வகையான சேவைகளை இச்செயலி மூலம் உழவர்கள் அணுக இயலும்.
  • இந்த செயலியின் மூலம் உழவர்கள் பின்வரும் சேவைகளை பெறலாம்.
    • பண்ணை மானியங்கள் மீதான தகவல்கள்.
    • தங்களுடைய பயிர் காப்பீடு தொடர்பான தகவல்கள்
    • அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிக்கை.
  • மேலும் இச்செயலியானது உள்ளூர் அரசு மற்றும் தனியார் வேளாண் அங்காடிகளில் உள்ள விதைகள் மற்றும் உரங்களின் இருப்பு (stocks) பற்றிய தகவல்களையும் உழவர்களுக்கு வழங்கும்.
  • மேலும் இயற்கை வேளாண்மையின் சிறந்த மேலாண்மைக்காகவும் மண்வளத்தை மேம்படுத்தவும் அதனைப் பேணிப் பராமரிக்கவும் தமிழக அரசானது “அம்மா உயிரி – உரங்கள் திட்டத்தை”  (Amma Bio-Fertiliser’ scheme) தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்