இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் சல்சோலா ஒபோசிடிஃபோலியா டெஸ்ஃபோன்டானியா எனப்படும் புதிய கடல் உப்புச் சேற்றுச் செடி வகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது புதர் வகை தாவர (அமராந்தாசியே) குடும்பத்தைச் சேர்ந்தது.
இது உவர், வறண்ட மற்றும் பகுதியளவு வறண்டச் சூழல்களில் நன்கு வளரும் திறன் கொண்டது.
இது உவர் தன்மை கொண்ட சூழலுக்கான ஒரு தகவமைப்பு கொண்ட ஹாலோபைட் (உவர்நிலத் தாவரம்) ஆகும்.
இவற்றின் இலைகளில் உவர்தன்மை கொண்ட இலைச்சாறு காணப் படுகின்றன.
சல்சோலா இனத்தைச் சேர்ந்த இந்தத் தாவரங்கள் சலவை சோடா, கடுங்கார நீர், வழலைக் கட்டிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியவற்றினைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுகிறது.