TNPSC Thervupettagam

உவர்நீர் மீன்வளர்ப்பு மையங்கள் 2025

April 12 , 2025 11 days 70 0
  • ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் உவர்நீர் இறால் மீன்வளர்ப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம் ஆனது மும்பை நகரில் நடைபெற்றது.
  • இந்தக் கூட்டம் ஆனது, உவர்நில வளங்களின் உற்பத்தித் திறனை மீன்வளர்ப்புக்குப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்த 4 மாநிலங்களிலும் சுமார் 58,000 ஹெக்டேர் பரப்பிலான உவர்நிலம் அடையாளம் காணப் பட்டுள்ளது ஆனால் தற்போது சுமார் 2,608 ஹெக்டேர் மட்டுமே இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது.
  • உவர்நீர்வாழ் உயிரின வளர்ப்பு என்பது உவர்நீர் ஊடுருவிய நிலங்களை (மிகப் பெரும்பாலும் வழக்கமான வேளாண்மைக்குப் பொருத்தமற்றது) உள்நாட்டு உவர்நீர் வாழ் உயிரின வளர்ப்பிற்குப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.
  • கடல் சார் உணவு ஏற்றுமதி மதிப்பில் இறால் ஏற்றுமதியானது 65 சதவீதத்திற்கும் மிக அதிகமானப் பங்கினைக் கொண்டுள்ளதுடன் இந்தியா உலகளவில் வளர்ப்பு இறால் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்