TNPSC Thervupettagam

உவர்ப்புத் தன்மை அதிகரிப்பால் கங்கை டால்பின்களுக்கு பாதிப்பு

January 10 , 2019 2018 days 634 0
  • சங்கீதா மித்ரா (தேதிய பல்லுயிர் ஆணையம், சென்னை) மற்றும் மஹுவா ராய் சவுத்ரி (கடல்சார் உயிரியலாளர், கல்கத்தா) ஆகியோரின் 5 ஆண்டுக்கால ஆய்வின் அறிக்கையானது Journal of Threatened Taxa-ல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வானது கங்கை நதி டால்பின்களின் வசிப்பிடத்தின் நீரில் உவர்ப்புத்தன்மை அதிகரித்து வருவது அவற்றிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கண்டறிந்துள்ளது.
  • கங்கை நதி டால்பின்கள் மட்டுமே இந்தியாவில் எஞ்சியிருக்கும் நன்னீரில் வாழும் டால்பின் ஆகும்.
  • கங்கை நதி டால்பின்களானது நேபாளம், இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளின் கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா மற்றும் கர்னா புலி ஆகிய ஆறுகளில் மட்டுமே வசிக்கின்றன.
  • இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கான கங்கை நதி டால்பின்கள் IUCN-ன் அச்சுறு நிலையில் உள்ள விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்