TNPSC Thervupettagam

உஸ்தத் சந்த் கான் வாழ்நாள் சாதனையாளர் விருது

October 23 , 2018 2128 days 1152 0
  • கிராமி விருது பெற்ற ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசைக்கலைஞர் பண்டிட் விஸ்வா மோகன் பட்டுக்கு இந்த ஆண்டிற்கான உஸ்தத் சந்த் கான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
  • இது தில்லி கரானாவின் சர்சாகர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய பாரம்பரிய விழாவில் அறிவிக்கப்பட்டது.
  • இவர் 1993 ஆம் ஆண்டில் ரை கூடர் உடன் ‘எ-மீட்டிங் பை த ரிவர்’ என்ற பாடல் தொகுப்பிற்காக கிராமி விருதினைப் பெற்றார்.
  • மேலும் இவர் 2017-ல் பத்மபூஷன், 2002-ல் பத்ம ஸ்ரீ மற்றும் 1998-ல் சங்கீத நாடக அகாடமி விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார்.
  • 1940 ஆம் ஆண்டில் “உஸ்தத் சந்த் கான் சாஹப் ஆல் சர்சாகர்” சங்கம் நிறுவப்பட்டது.
  • இது பாரம்பரியக் கலைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் உயர்ந்த மற்றும் பல்வகைத் தன்மையுடைய பாரம்பரியக் கலைகளைப் பாதுகாப்பதையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்