TNPSC Thervupettagam
December 28 , 2018 2159 days 692 0
  • மத்திய இரயில்வேயின் நாக்பூர் பிரிவின் இயந்திரவியல் கிளையானது உஸ்தாட் (USTAAD) எனும் பெயரிடப்பட்ட புதிய செயற்கை நுண்ணறிவுடைய ரோபோவை உருவாக்கியுள்ளது.
  • உஸ்தாட் என்பதன் விரிவாக்கம் - செயற்கை நுண்ணறிவு உதவியுடனான இயந்திரம் மூலமாக அடித்தள கருவிகள் கண்காணிப்பு (USTAAD - Undergear Surveillance through Artificial Intelligence Assisted Droid) என்பதாகும்.
  • இது உயர் தெளிவுத்திறன் உள்ள புகைப்படக் கருவி மூலம் இரயில் பெட்டிகளின் கருவிகளை சோதனை செய்து நிகழ்நேரத்தில் வைஃபை வழியாக பரிமாற்றம் செய்கிறது.
  • இது இந்திய ரயில்வேயின் இரயில்களில் உள்ள அடித்தள கருவிகளை ஆய்வு செய்யும்போது உண்டாகும் மனிதப் பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்