TNPSC Thervupettagam

ஊடகம் மற்றும் பருவ நிலை மாற்றம்

May 2 , 2019 1906 days 609 0
  • பருவ நிலை நடவடிக்கை மற்றும் பேரிடரை எதிர்கொள்ளுதல் மீதான ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு கூட்டமைப்பு (ABU - Asia Pacific Broadcasting Union) ஊடக மாநாட்டின் 5-வது பதிப்பானது காத்மாண்டுவில் நடத்தப்பட்டது.
  • இரண்டு நாள் மாநாட்டின் கருத்துருவானது, “நீடித்த எதிர்காலத்திற்கான ஊடகத் தீர்வுகள்: உயிர்களைப் பாதுகாத்தல், வலிமையான சமூகங்களைக் கட்டமைத்தல்” என்பதாகும்.
  • இந்த மாநாடானது பின்வருவனவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
    • பருவ நிலை நடவடிக்கை மற்றும் பேரிடரை எதிர் கொள்ளுதலை ஊக்குவிப்பதற்கு ஊடகத்தின் திறனைப் பயன்படுத்துதல்.
    • ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயல்முறைத் திட்டங்களுக்காக பங்குதாரர்களை ஊடக உறுப்பினர்களுடன் இணைத்தல்.
  • ABU ஆனது 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் கோலாலம்பூரில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்