ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 02
November 4 , 2024 69 days 88 0
ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களை நீதியின் முன் நிறுத்தவும் வேண்டிய அவசரத் தேவையை நிவர்த்தி செய்வதில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது.
கருத்துச் சுதந்திர உரிமைக்காகப் போராடவும், உண்மையைப் வெளிக் கொணரும் முயற்சியில் உயிர் இழந்தவர்களைக் கௌரவிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
2013 ஆம் ஆண்டு நவம்பர் 02 ஆம் தேதியன்று மாலி நாட்டில் இரண்டு பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
2006 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலகம் முழுவதும் சுமார் 1,700 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Safety of Journalists in Crises and Emergencies” என்பதாகும்.