TNPSC Thervupettagam

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 02

November 5 , 2022 659 days 248 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது (UNGA) 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதற்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய போது இந்தத் தினமானது நடைமுறைக்கு வந்தது.
  • ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனை விதிக்கப்படாமல் குற்றவாளிகள் தப்பிப்பது குறித்து இந்தத் தினம் கவனத்தை ஈர்க்கிறது.
  • 2013 ஆம் ஆண்டு நவம்பர் 02 ஆம் தேதியன்று, மாலியில் இரண்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • 2006 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 1,200க்கும் மேற்பட்டப் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியைச் செய்ததற்காக கொல்லப்பட்டதாக யுனெஸ்கோவின் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.
  • இதில் 90% வழக்குகளில் கொலையாளிகள் தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்