ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கானத் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 02
November 4 , 2023 388 days 186 0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது (UNGA) 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதையடுத்து இத்தினம் நடைமுறைக்கு வந்தது.
இந்தத் தினமானது, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை இன்மை மீதான கவனத்தை ஈர்க்கிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை, நேர்மையான தேர்தல் முறை மற்றும் பொதுத் தலைமையின் பெரும் பங்கு என்பதாகும்.
2020-2021 ஆம் ஆண்டில் 117 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 38% கொலைகள் நடந்துள்ள நிலையில் அதைத் தொடர்ந்து ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் 32% கொலைகள் நடந்துள்ளன.
2021 ஆம் ஆண்டில், கொல்லப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களிலும் பெண்களின் சதவீதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில் இது முந்தைய ஆண்டில் இருந்த 6 சதவீதத்திலிருந்து 11% ஆக உயர்ந்துள்ளது.