HDFC வங்கி, மனிதப் பண்புகளுடைய ஊடாடும் செயல்பாடுடைய, ஊடாடும் ரோபோ உதவியாளரை (Interactive Robot Assistant – IRA) கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் அமைந்துள்ள தன்னுடைய கோரமங்கலம் கிளையில் தொடங்கியுள்ளது. இது (மனிதப்பண்புகளுடைய ஊடாடும் செயல்பாடுடைய ரோபோ) இவ்வங்கியின் கிளைக்கு வருகை புரியும் நுகர்வோர்களின் பயன்பாட்டாளர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
மனிதப் பண்புகளுடைய IRA 1.0 ஐ அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் வங்கி HDFC வங்கியாகும். இவ்வங்கி, ஜனவரி 2018-ல் மும்பையிலுள்ள தன்னுடைய கமலா மில்ஸ் கிளையில் வாடிக்கையாளர் சேவைக்காக இந்த ரோபோவை அறிமுகப்படுத்தியது. நடப்பில் IRA 1.0 ஆனது கொச்சியின் பலரிவட்டோம் கிளையில் பயன்படுத்தப்படுகிறது. IRA1.0 என்பது GPS ஆல் இயங்கும் உட்புற மனிதப் பண்புகளுடைய ரோபோ ஆகும். இதற்கு வாடிக்கையாளர்கள் பேசுவதை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பயிற்சியளிக்கப்படும். மேலும் இது பேச்சை புரிந்து கொள்ளும் தொகுதிகளையும் (Speech Recognising Modules) கொண்டுள்ளது.
வங்கிக்கிளையின் உட்பகுதியில் நகர்ந்து செல்வதற்கு இது மீயொலி உணரிகளை (Sensors) பயன்படுத்துகிறது. வாடிக்கையாளர்களை புரிந்துகொள்வதற்காக (To recognise) இது முகத்தை கண்டறியும் வழிமுறையையும் (Algorithm) கொண்டுள்ளது.