இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது, முனைப்பு மிக்க ஊடுகதிர் மூலங்களின் முனைவாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக அதன் முதல் ஊடுகதிர் முனைவாக்கமானி செயற்கைக்கோளை (XPoSat) விண்ணில் ஏவுவதற்கான ஒரு திட்டத்தினை அறிவித்துள்ளது.
ஊடுகதிர் மூலங்களிலிருந்து வெளிப்படும் 8-30 keV திறன் அளவிலான ஆற்றல் அலை வரிசையில் ஊடுகதிர் முனைவாக்கத்தினை அளவிடுதல் மற்றும் 0,8 முதல் 15 keV திறன் அளவிலான ஆற்றல் அலைவரிசையில் காஸ்மிக் ஊடுகதிர் மூலங்களின் நீண்ட கால நிறமாலை மற்றும் தற்காலிக ஆய்வுகள் ஆகியவை இந்த ஆய்வில் அடங்கும்.
இந்தத் திட்டமானது தோராயமாக ஐந்து ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.