ஊடுருவும் அயல் உயிரினங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாடு பற்றிய மதிப்பீட்டு அறிக்கை
September 8 , 2023 448 days 248 0
அரசுகளுக்கிடையேயான பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் (IPBES) தளம் ஆனது இந்தப் புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
பல்வேறு மனித நடவடிக்கைகளால் உலகெங்கிலும் உள்ள பகுதிகள் மற்றும் உயிரினங்களுள் அறிமுகப்படுத்தப் பட்ட, தாவரங்கள் மற்றும் விலங்குகள் உட்பட 37,000 அயல் இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 3,500க்கும் மேற்பட்ட ஊடுருவும் அயல் இனங்கள் அடங்கும் என்ற நிலையில் இந்த ஊடுருவும் அயல் இனங்களானது உலகளவில் பதிவான தாவர மற்றும் விலங்கின அழிவுகளில் 60% பங்கினை வகித்துள்ளன.
ஊடுருவும் அயல் இனங்கள் ஆனது உலகளவில் பதிவான பல்லுயிர் இழப்பிற்கான ஐந்து முக்கிய நேரடிக் காரணிகளில் ஒன்றாகும்.
அனைத்து வகையான ஊடுருவும் அயல் இனங்களும் பல்லுயிர்ப் பெருக்கம், உள் நாட்டுச் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இனங்கள் மீது எதிர்மறையானத் தாக்கங்களை ஏற்படுத்துவதும் பரப்புவதும் இல்லை.
சுமார் 6% அயல் இன தாவரங்கள்; 22% அயல் இன முதுகெலும்பில்லாத உயிரினங்கள்; 14% அயல் இன முதுகெலும்பிகள்; மற்றும் 11% அயல் இன நுண்ணுயிர்கள் ஒரு சூழலமைவில் ஆக்கிரமிப்பு செய்த இனங்களாக அறியப்படுகிற நிலையில், இது இயற்கைக்கும் மக்களுக்கும் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.
1,200க்கும் மேற்பட்ட உள்ளூர் இனங்களின் அழிவிற்கு குறைந்தது 218 ஊடுருவும் அயல் இனங்கள் காரணமாக உள்ளன.
உயிரியல் சூழலமைவில் ஊடுருவும் அயல் இனங்களின் தாக்கங்கள் ஆனது அமெரிக்காவில் 34 சதவீதமும், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 31 சதவீதமும், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் 25 சதவீதமும், ஆப்பிரிக்காவில் சுமார் 7 சதவீதமும் பதிவாகியுள்ளன.
நிலத்தின் மீது (சுமார் 75%) அதிகளவில் எதிர்மறையான தாக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில் நன்னீர் (14%) மற்றும் கடல்சார் (10%) வாழ்விடங்களில் கணிசமான அளவில் குறைவான தாக்கமே பதிவாகியுள்ளன.
பெரும்பாலான நாடுகள் (80%) தங்களது தேசியப் பல்லுயிர்த் திட்டங்களில், ஊடுருவும் அயல் உயிரினங்களை மேலாண்மை செய்வது தொடர்பான இலக்குகளை உள்ளடக்கி உள்ளன.