TNPSC Thervupettagam

ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் மற்றும் நகர கம்போஸ்ட் திட்டம்

April 6 , 2018 2426 days 1260 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் மற்றும் நகர கம்போஸ்ட் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களும் 12வது நிதியாண்டைத் தாண்டி 2019-2020 வரை தொடர அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்த முன்மொழிவு மத்திய உரத்துறையால் முன்னனுப்பப் பட்டது (Forwarded). இவ்விரு திட்டங்களையும் 2019-2020 வரை தொடர தேவைப்படும் செலவினத் தொகை ரூ. 61,972 கோடியாகும்.
  • இவ்விருத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவது என்பது விவசாயங்களுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுடைய விலையில் (Statutory Controlled Prices) தேவையான அளவில் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யும்.
  • விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு மானியங்களுக்கான 100% தொகையும் நேரடி பயன் மாற்றம் (Direct Benefit Transfer - DBT) முறையில் வழங்கப்படும்.
  • பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றிற்கான மானியம் மற்றும் நகர கம்போஸ்ட் திட்டத்தின் மீதான சந்தை மேம்பாட்டு உதவி (Market Development Assistance – MDA) ஆகியவை வருடாந்திர அடிப்படையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் பரிந்துரைக்கப்படும் மானிய விகிதங்களில் வழங்கப்படும்.

  • பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் ஆகிய உரங்களுக்கான மானியம், 2016-ல் தொடங்கப்பட்ட ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  • அதே போன்று, சந்தை மேம்பாட்டு உதவிகள் ஆனது 2016-ல் தொடங்கப்பட்ட நகர கம்போஸ்ட் திட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  • நகர கம்போஸ்ட் திட்டத்தின் நோக்கமானது, நகரங்களில் உற்பத்தியாகும் கழிவுகளை கம்போஸ்ட் / உயிரி எரிவாயுவாக மாற்றி உர நிறுவனங்களின் உதவியோடு கம்போஸ்ட்–ஐ சந்தையிடுவதன் மூலம் விவசாயிகளை நன்மையடையச் செய்தலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்