நாட்டில் விவசாயிகளுக்கான மானியத் திட்டங்கள் எதிர்மறையானத் தாக்கங்களை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக வேண்டி திருத்தப்பட்ட மதிப்பீட்டுக் கட்டத்தில் இந்தத் துறைக்கான கூடுதல் நிதியை கோருமாறு இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு அமைச்சகத்தினை வலியுறுத்தியுள்ளது.
உற்பத்தி அலகுகளை சரியான நேரத்தில் நிறுவுவதை உறுதி செய்வதன் மூலம் நுண் யூரியா மற்றும் நுண் டை அம்மோனியம் பாஸ்பேட் (DAP) மீதான உற்பத்தித் திறனை விரிவுபடுத்தவும் அக்குழு மத்திய அரசிற்குப் பரிந்துரைத்துள்ளது.
கூடுதலாக, இந்த நுண் உரங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக ஓர் உத்தியையும் முன் வைத்துள்ளது/கோரியுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில், நிதியானது குறைவாகப் பயன்படுத்தப் பட்டதையும் இக்குழு எடுத்துரைத்துள்ளது.
இதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் (PK) வகை உரங்கள் பிரிவின் கீழ் 20%, இறக்குமதி செய்யப்பட்ட PK உரங்கள் பிரிவின் கீழ் 12%, உள்நாட்டு யூரியா உரங்கள் பிரிவின் கீழ் 14.76% மற்றும் சந்தை மேம்பாட்டு உதவியின் (MDA) கீழ் 59.57% ஆகியவை அடங்கும்.