TNPSC Thervupettagam

ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்த ஒரு கூட்டு மதிப்பீட்டு அறிக்கை

June 1 , 2023 418 days 375 0

  • 2023 ஆம் ஆண்டிற்கான ‘ஊட்டச்சத்து குறைபாடு குறித்த கூட்டு மதிப்பீடுகள்’ (JME) என்ற ஒரு அறிக்கையானது யுனிசெஃப், உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகிய அமைப்புகளால் வெளியிடப் பட்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை 16 மில்லியன் குறைவாக இருந்தது.
  • இந்தியாவில் 2012 ஆம் ஆண்டில்  சுமார் 41.6% ஆக இருந்த ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குன்றல் விகிதமானது 2022 ஆம் ஆண்டில் 31.7% ஆக குறைந்து உள்ளது.
  • இந்த எண்ணிக்கையானது 52 லட்சத்தில் இருந்து தற்போது 36 லட்சமாக குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 18.7% ஆக இருந்த ஒட்டு மொத்த நலிவடைதல் பாதிப்பானது இந்த ஊட்டச்சத்துக் குறைபாடு மீதான குறிகாட்டியின் உலகளாவிய எண்ணிக்கையில் 49% பங்கினைக் கொண்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டில் 2.2% ஆக இருந்த உடல் பருமனின் பாதிப்பு ஆனது, 2022 ஆம் ஆண்டில் 2.8% ஆக அதிகரித்துள்ளது.
  • இதில் சர்வதேச அளவில் இந்தியா 8.8% பங்களிக்கிறது.
  • ஆனால் உடல் பருமனுக்கான ஒட்டு மொத்த வகைப்பாடு குறைவாகவும், உலகளாவியப் பாதிப்பு பரவலான 5.6 சதவீதத்தினை விட மிகக் குறைவாகவும் உள்ளது.
  • உலகளவில், 2012 ஆம் ஆண்டில் 26.3% ஆக இருந்த வளர்ச்சி குன்றிய நிலைப் பரவலின் அதிகரிப்பு விகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டில்  22.3% ஆக குறைந்துள்ளது.
  • தெற்காசியாவில் இது சுமார் 40.3 சதவீதத்திலிருந்து சுமார் 30.5% ஆகக் குறைந்ததால் அந்த எண்ணிக்கையில் மிக அதிகச் சரிவானது பதிவாகியுள்ளது.
  • உலகளவில் எடை சார்ந்து ஏற்படும் பிரச்சினையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை,  ஏனெனில் அதன் பாதிப்புப் பரவல் விகிதம் 5.5 சதவீதத்திலிருந்து 5.6% ஆக அதிகரித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்