TNPSC Thervupettagam

ஊட்ஷி என்ற பதப்படுத்தப்பட்ட உடலில் இருந்து பெறப்படும் புதிய மரபணு சார் தகவல்கள்

August 30 , 2023 452 days 252 0
  • 1991 ஆம் ஆண்டில், மலையேறும் வீரர்கள் ஆஸ்திரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள இத்தாலியப் பள்ளத்தாக்கில் உறைந்த சடலத்தின் கண்டு வியந்தனர்.
  • அந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டப் பள்ளத்தாக்கின் பெயரால் இதற்கு ஊட்ஷி என்று பெயரிடப் பட்டது.
  • இந்த உடலின் எச்சங்கள் சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு, அம்பு தாக்கி உயிரிழந்த ஒரு மனிதனுடையதாகும்.
  • ஊட்ஷி, முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்ட தகவல்களில் இருந்து வேறுபட்டவாறு கருமையான தோல், கருமையான கண்கள் மற்றும் உதிர்ந்த முடி வகிடுகள் ஆகியவற்றைக் கொண்டிருந்ததாக சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியது.
  • அந்த நபர் மரபியல் ரீதியான வழுக்கை கொண்டவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது.
  • முந்தைய ஆராய்ச்சியானது ஊட்ஷி மற்றும் நவீன கால சார்டினியன் இனத்தவர்களுக்கும் இடையே ஒரு மரபணு தொடர்பு இருப்பதை எடுத்துரைத்தது.
  • இருப்பினும், புதிய ஆய்வானது இந்த உடலின் மரபணு அமைப்பின் பெரும்பகுதியானது ஆரம்பகால அனடோலியன் விவசாயக் குழுக்களின் அமைப்பினை ஒத்து உள்ளதாக கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்