ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது (Asian Infrastructure Investment Bank-AIIB) மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஊரக சாலை இணைப்பினை மேம்படுத்துவதனை நோக்கமாக கொண்ட சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு 140 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அண்மையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்-கில் நடைபெற்ற ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் இயக்குநர் குழுவின் சந்திப்பின் போது இந்த கடன் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலக வங்கி இந்த திட்டத்திற்கு கூட்டு நிதியுதவி (co-finance) வழங்க உள்ளது.
AIIB
பல்தரப்பு மேம்பாட்டு வங்கியான (multilateral development bank) ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது சீனாவினால் துவங்கப்பட்டது.
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படுகின்ற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்திய இணைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி வங்கி தோற்றுவிக்கப்பட்டது.
இதுவரை இந்தியா உட்பட மொத்தம் 84 நாடுகள் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் உறுப்பினராக உள்ளனர்.
அதிகாரப்பூர்வ முறையில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோற்றுவிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வணிகத்திற்காக திறக்கப்பட்டது.
இதன் தலைமையகம் சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைந்துள்ளது.
06 சதவீதம் வாக்களிப்புப் பங்கினைக் (voting shares) கொண்டு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியினுடைய மிகப் பெரிய பங்குதாரராக (shareholder) சீனா உள்ளது.
5 சதவீதம் வாக்களிப்புப் பங்கினைக் கொண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியினுடைய இரண்டாவது பெரிய பங்குதாராக இந்தியா உள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்த இடங்களில் ரஷ்யா, ஜெர்மனி, மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பெரும் பங்கினைக் கொண்டுள்ளன.