TNPSC Thervupettagam

ஊரக இணைப்பு – மத்தியப் பிரதேசம்

April 23 , 2018 2440 days 780 0
  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது (Asian Infrastructure Investment Bank-AIIB) மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஊரக சாலை இணைப்பினை மேம்படுத்துவதனை நோக்கமாக கொண்ட சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு 140 மில்லியன்  அமெரிக்க டாலர்கள்   கடன் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • அண்மையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்-கில் நடைபெற்ற ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் இயக்குநர் குழுவின் சந்திப்பின் போது   இந்த  கடன் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • உலக வங்கி இந்த திட்டத்திற்கு கூட்டு நிதியுதவி (co-finance) வழங்க உள்ளது.

AIIB

  • பல்தரப்பு மேம்பாட்டு வங்கியான (multilateral development bank) ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது    சீனாவினால்   துவங்கப்பட்டது.
  • ஆசிய-பசுபிக்  பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படுகின்ற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்திய இணைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி   வங்கி தோற்றுவிக்கப்பட்டது.
  • இதுவரை இந்தியா உட்பட மொத்தம் 84 நாடுகள் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் உறுப்பினராக உள்ளனர்.
  • அதிகாரப்பூர்வ முறையில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோற்றுவிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வணிகத்திற்காக திறக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைந்துள்ளது.
  • 06 சதவீதம் வாக்களிப்புப் பங்கினைக் (voting shares) கொண்டு  ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியினுடைய மிகப் பெரிய பங்குதாரராக (shareholder)  சீனா உள்ளது.
  • 5 சதவீதம் வாக்களிப்புப் பங்கினைக் கொண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியினுடைய இரண்டாவது பெரிய பங்குதாராக இந்தியா உள்ளது.
  • இந்தியாவைத் தொடர்ந்த இடங்களில் ரஷ்யா, ஜெர்மனி, மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பெரும் பங்கினைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்