TNPSC Thervupettagam

ஊரக மேம்பாட்டுத் துறையின் சாதனைகள் 2024

November 14 , 2024 11 days 71 0
  • எட்டு மாவட்டங்களில் எட்டு புதிய சமத்துவபுரங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் புதிய சமத்துவபுரங்களுக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தூய்மை பாரதம் என்ற திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ், 2021-22 ஆம் ஆண்டு முதல் 2.43 லட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
  • நமக்கு நாமே என்ற திட்டத்தின் கீழ் 6,400க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு 5,700க்கும் மேற்பட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
  • ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற திட்டத்தின் கீழ், 2024-25 ஆம் ஆண்டில் மொத்தம் 3,500 கோடி ரூபாய் செலவில் 1 லட்சத்துக்கும் மிக அதிகமான கான்கிரீட் (பைஞ்சுதை) வீடுகள் கட்டமைக்கப்பட உள்ளன.
  • கிராமப்புறங்களில் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டு மே 07 ஆம் தேதி முதல் அக்டோபர் 03 ஆம் தேதி வரை 3.30 லட்சம் வீடுகள் கட்டமைக்கப் பட்டுள்ளன.
  • ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள சுமார் 7.15 லட்சம் வீடுகளுக்கு மொத்தம் 2,123 கோடி ரூபாய் செலவில் குடிநீர் வழங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்