TNPSC Thervupettagam

ஊர்வன இனங்களின் கணக்கெடுப்பு – MTR

October 9 , 2024 45 days 72 0
  • முதுமலை புலிகள் காப்பகத்தின் (MTR) தாங்கல் பகுதி காடுகளில் சமீபத்தில் மேற் கொள்ளப் பட்ட ஊர்வன இனங்களின் கணக்கெடுப்பில் புதிய இனங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
  • 33 ஊர்வன இனங்கள் மற்றும் 36 நீர்நில வாழ் இனங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
  • இந்தக் கணக்கெடுப்பு ஆனது நான்கு சாத்தியமான புதிய இனங்களை வெளிப்படுத்தி உள்ளது:
    • இரண்டு மரப் பல்லிகள் (ஒன்று சினிமாஸ்பிஸ் இனத்தைச் சேர்ந்தது, மற்றும் மற்றொன்று ஹெமிடாக்டைலஸ் இனத்தைச் சேர்ந்தது)
    • ஓர் அரணை மற்றும்
    • ஸ்பாரியோதேகா இனத்தைச் சேர்ந்த ஒரு தவளை.
  • அடையாளம் காணப்பட்ட இனங்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 55 ஊர்வன இனங்கள் மற்றும் 39 நீர் நில வாழ் இனங்கள் ஆக உள்ளன என்ற நிலையில் இதில் தோராயமாக 40% இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்தவை.
  • IUCN அமைப்பின் படி, இவற்றில் சுமார் 16 இனங்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதோடு இதில் மேலும் மூன்று இனங்கள் அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனமாகக் கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்