ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தின் (ATR) பொள்ளாச்சிக் கோட்டத்தில் உள்ள கிராஸ் ஹில்ஸ் தேசியப் பூங்கா மற்றும் கரியன் சோலை தேசியப் பூங்காவில் முதன் முறையாக ஊர்வன இனங்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பில் 20 வகையான ஊர்வன மற்றும் 34 வகையான நீர்நில வாழ்வி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த கணக்கெடுப்புக் குழுவானது கிராஸ் ஹில்ஸ் தேசியப் பூங்காவில் 11 ஊர்வன இனங்களையும் 12 நீர்நில வாழ் இனங்களையும் பதிவு செய்துள்ளது.
இந்தப் பூங்காவானது வால்பாறை வனப்பகுதியில் சுமார் 3,122 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
உலாந்தி வனச் சரகத்தில் உள்ள டாப் ஸ்லிப் பகுதியில் அமைந்துள்ள கரியன் சோலை தேசியப் பூங்காவில் மொத்தம் ஒன்பது ஊர்வன மற்றும் சுமார் 22 நீர்நில வாழ் இனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள ஆனைமலை பறக்கும் தவளை (ராகோபோரஸ் சூடோமலாபாரிகஸ்) மற்றும் டெக்கான் இரவு வாழ் தவளை (நைக்டிபாட்ரசுஸ் டெக்காநென்சிஸ்) ஆகிய இனங்களையும் இந்த ஆய்வுக் குழு பதிவு செய்துள்ளது.