2018-ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடங்க உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (Board of Control for Cricket in India- BCCI) ராஜஸ்தானின் முன்னாள் காவல் துறை இயக்குநரான (ex-Director General of Police) அஜித் சிங்-கை 2018-ஆம் ஆண்டிற்கான தனது ஊழல் எதிர்ப்புப் பிரிவின் (Anti-Corruption unit) தலைவராக நியமித்துள்ளது.
BCCI-யினுடைய ஊழல் எதிர்ப்புப் பிரிவின் (Anti-Corruption unit) தலைவராக இருந்து வரும் டெல்லியின் முன்னாள் காவல்துறை பொது இயக்குநரான நீரஜ் குமாருக்கு பதிலாக தற்போது அஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நீரஜ் குமார் 2018 ஆம் ஆண்டின் மார்ச் 31 ஆம் தேதி வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் ஆலோசராக நியமக்கப்பட்டுள்ளார்.