TNPSC Thervupettagam

ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்

October 31 , 2017 2627 days 9837 0
  • இந்தியாவின் இரும்புமனிதர் என்றழைக்கப்படும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுதில்லியில் "ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை" துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கிவைத்தார்.
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 ஆம் தேதி வரையிலான நாட்கள் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் (CVC- Central Vigilance Commission) கடைப்பிடிக்கப்படுகிறது.
  • 2017 ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் கருத்துரு – “என் தொலைநோக்கு – ஊழல் இல்லா இந்தியா”
  • ஊழல் தொடர்பான நடைமுறைகளையும், அவற்றை எப்படி முறையிட வேண்டும் என்பதைப் பற்றியும் பெருமளவில் மக்களிடம் கற்பித்தலை உருவாக்க இந்த ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்  (CVC- Central Vigilance Commission)
  • அரசாங்க ஊழல் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க உருவாக்கப்பட்ட ஓர் தன்னாட்சி சட்ட அமைப்பே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகும்.
  • எந்த ஒரு நிர்வாக அதிகாரிகளின் இடையூற்றுக் கட்டுப்பாடுகளும் இன்றி இந்திய அரசாங்கத்தின் கீழ் அனைத்து லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் அமைப்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் செயல்படுகிறது.
  • இந்த ஆணையம்,
  • தலைவராக - ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரையும்,
  • உறுப்பினராக – இரண்டுக்கு மேல் அல்லாத கண்காணிப்பு ஆணையர்களையும் கொண்டது.
  • இவர்களது பதவிக்காலம் – 4 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை.
  • பிரதமரை தலைவராகக் கொண்ட, உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்ளடங்கிய 3 பேருடைய குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத்தலைவரால் இவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்