இந்தியாவின் இரும்புமனிதர் என்றழைக்கப்படும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுதில்லியில் "ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை" துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கிவைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 ஆம் தேதி வரையிலான நாட்கள் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் (CVC- Central Vigilance Commission) கடைப்பிடிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் கருத்துரு – “என் தொலைநோக்கு – ஊழல் இல்லா இந்தியா”
ஊழல் தொடர்பான நடைமுறைகளையும், அவற்றை எப்படி முறையிட வேண்டும் என்பதைப் பற்றியும் பெருமளவில் மக்களிடம் கற்பித்தலை உருவாக்க இந்த ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மத்தியஊழல்கண்காணிப்புஆணையம் (CVC- Central Vigilance Commission)
அரசாங்க ஊழல் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க உருவாக்கப்பட்ட ஓர் தன்னாட்சி சட்ட அமைப்பே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகும்.
எந்த ஒரு நிர்வாக அதிகாரிகளின் இடையூற்றுக் கட்டுப்பாடுகளும் இன்றி இந்திய அரசாங்கத்தின் கீழ் அனைத்து லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் அமைப்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் செயல்படுகிறது.
இந்த ஆணையம்,
தலைவராக - ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரையும்,
உறுப்பினராக – இரண்டுக்கு மேல் அல்லாத கண்காணிப்பு ஆணையர்களையும் கொண்டது.
இவர்களது பதவிக்காலம் – 4 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை.
பிரதமரை தலைவராகக் கொண்ட, உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்ளடங்கிய 3 பேருடைய குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத்தலைவரால் இவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.