TNPSC Thervupettagam

ஊழல் கண்ணோட்டக் குறியீடு (CPI) 2024

February 14 , 2025 9 days 77 0
  • டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பானது 2024 ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்ணோட்டக் குறியீட்டினை (CPI) வெளியிட்டுள்ளது.
  • ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகியவை அடுத்த இரண்டு இடங்களிலும் உள்ளன.
  • 2024 ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில் (CPI) இடம் பெற்றுள்ள 180 நாடுகளில் இந்தியாவின் ஒட்டு மொத்த மதிப்பெண் ஒரு புள்ளி குறைந்து 38 ஆகக் குறைந்ததால் இந்தியா 96வது இடத்தைப் பிடித்தது.
  • இந்தக் குறியீடானது, சுழியிலிருந்து 100 வரையிலான அளவுருவினைப் பயன்படுத்தச் செய்கிறது என்பதோடு இதில் "சுழியம்" என்பது அதிக ஊழல் மிக்க நாடாகவும் "100" என்பது ஊழல் குறைந்த நாடாகவும் வகைப்படுத்தப்படுகிறது.
  • இந்தியாவின் ஒட்டு மொத்த மதிப்பெண் ஆனது 2024 ஆம் ஆண்டில் 38 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 39 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 40 ஆகவும் இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டில் இக்குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 93 ஆக இருந்தது.
  • இந்தியாவின் அண்டை நாடுகளில், சீனா 76வது இடத்தையும், பாகிஸ்தான் 135வது இடத்திலும் மற்றும் இலங்கை 121வது இடத்திலும், வங்காளதேசம் 149 வது இடத்தையும் இதில் பிடித்துள்ளன.
  • தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் இதில் முறையே 8 மற்றும் 9 மதிப்பெண்களுடன் இக்குறியீட்டின் கடைசி இடத்தில் இடம் பெற்றன.
  • வெனிசுலா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் 10 மற்றும் 12 மதிப்பெண்களுடன் அதிக ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • உலக சராசரியான 43 மதிப்பெண் என்பது பல ஆண்டுகளாக ஒரு நிலையாக உள்ளது என்ற அதே நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் சுமார் 50க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்