டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பானது 2024 ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்ணோட்டக் குறியீட்டினை (CPI) வெளியிட்டுள்ளது.
ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகியவை அடுத்த இரண்டு இடங்களிலும் உள்ளன.
2024 ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில் (CPI) இடம் பெற்றுள்ள 180 நாடுகளில் இந்தியாவின் ஒட்டு மொத்த மதிப்பெண் ஒரு புள்ளி குறைந்து 38 ஆகக் குறைந்ததால் இந்தியா 96வது இடத்தைப் பிடித்தது.
இந்தக் குறியீடானது, சுழியிலிருந்து 100 வரையிலான அளவுருவினைப் பயன்படுத்தச் செய்கிறது என்பதோடு இதில் "சுழியம்" என்பது அதிக ஊழல் மிக்க நாடாகவும் "100" என்பது ஊழல் குறைந்த நாடாகவும் வகைப்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் ஒட்டு மொத்த மதிப்பெண் ஆனது 2024 ஆம் ஆண்டில் 38 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 39 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 40 ஆகவும் இருந்தது.
2023 ஆம் ஆண்டில் இக்குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 93 ஆக இருந்தது.
இந்தியாவின் அண்டை நாடுகளில், சீனா 76வது இடத்தையும், பாகிஸ்தான் 135வது இடத்திலும் மற்றும் இலங்கை 121வது இடத்திலும், வங்காளதேசம் 149 வது இடத்தையும் இதில் பிடித்துள்ளன.
தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் இதில் முறையே 8 மற்றும் 9 மதிப்பெண்களுடன் இக்குறியீட்டின் கடைசி இடத்தில் இடம் பெற்றன.
வெனிசுலா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் 10 மற்றும் 12 மதிப்பெண்களுடன் அதிக ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உலக சராசரியான 43 மதிப்பெண் என்பது பல ஆண்டுகளாக ஒரு நிலையாக உள்ளது என்ற அதே நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் சுமார் 50க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.