சர்வதேச வெளிப்படைத் தன்மைக்கான அமைப்பால் வெளியிடப்படும் (Transparency International) 2017ஆம் ஆண்டிற்கான ஊழல் குறித்த பட்டியலில் இந்தியா 81-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஆசிய-பசுபிக் பகுதியில் பத்திரிக்கை சுதந்திரம் வழங்காத மோசமான நாடுகளில் இந்தியாவும் இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு 176 நாடுகளில் இந்தியா 79வது இடத்தில் இருந்தது.
2017ஆம் ஆண்டிற்கான இந்தப் பட்டியல் 180 நாடுகளில் அவற்றின் பொதுத்துறையில் உள்ள ஊழலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
இந்த பட்டியல் 0 முதல் 100 என்ற அளவுகளைக் கொண்டது.
0 - அதிகளவு ஊழல்
100 - ஊழலற்ற நிலை
2017 பட்டியலில், இந்தியா 40 புள்ளிகள் பெற்றுள்ளது. 2015ல் இந்தியா 38 புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து 89 புள்ளிகளுடன் முதலிடத்தையும், டென்மார்க் 88 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.
மூன்றாவது இடத்தை பின்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் 86 புள்ளிகளுடன் பிடித்துள்ளன.
சோமாலியா 9 புள்ளிகளுடன் 180வது இடத்தைப் பிடித்துள்ளது.